Map Graph

கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில்

கேரளத்தில் உள்ள சிவன் கோயில்

கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில் என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில், கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இந்தக் கோயிலின் முதன்மை தெய்வம் மேற்கு நோக்கி எதிர்கொள்ளும் ராமேஸ்வரர் ஆவார். இந்த கொல்லம் ராமேஸ்வரம் மகாதேவர் கோவிலானது கேரளத்தின் 108 சிவன் கோவில்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலானது பரசுராமரால் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது. இது 108 சிவாலய சேத்திரங்களில் உள்ள இரண்டு இராமேஸ்வரம் கோவில்களில் ஒன்றாகும். அமரவில இராமேஸ்வரம் மகாதேவர் கோயில் என்பது இன்னொரு இராமேஸ்வரம் கோயிலாகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமரவில என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

Read article